நாசரேத் நூலகத்தில் தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமாரவிஸ்வரூபன் எழுதிய தேரிப்பிச்சி நாவல் வெளியிட்டு விழா நடந்தது. பேராசிரியர் காசிராஜன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச்செயலாளர் மருத்துவர் அறம் நூலை வெளியிட்டார். முன்னாள் அரசுச்செயலர் சுந்தரரேசன் ஐ.ஏ.எஸ் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நாசரேத் வணிகர் சங்க செயலாளர்செல்வன், பள்ளி தளாளர்கள் லோபா முருகன், ஜமீன்சாலமோன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் ரவிசெல்வகுமார், கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன், எழுத்தாளர்கள் நெல்லை தேவன், சாந்தி பிரபு, ஓய்வு பெற்ற தாசில்தார் அய்யாக்குட்டி, முனைவர் மணிமொழிச்செல்வன், குமிழ் முனை சைமன், வழக்கறிஞர் அகமது உள்பட பலர் கலந்துகொண்டனர். கண்ணன் நன்றி கூறினார். கண்ணகுமார விஸ்வரூபன் ஏற்புரை வழங்கினார்.


