முத்தாலங்குறிச்சி செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் உயிர் பலிவாங்க துடிக்கும் சாலை ஓர கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கிணற்றை சிறுகுறுமற்றும் நடுத்தர தொழில் நிறுனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா பார்வையிட்டார். உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் தொடர்ப்புகொண்டு பேசினார். விரைவில் இவ்விடத்தில் தடுப்புசுவர் கட்டபடும் என அவர் கூறினார். அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மற்றும் த.வெ.கவினர் உடனிருந்தனர்.


