தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஜமாபந்தி’ பணி இன்று துவங்கியது. ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பசலி 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடிவு செய்யும் வருடாந்திர ‘ஜமாபந்தி’ பணி இன்று துவங்கியது. இதன் முதற்கட்டமாக ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், ஜமாபந்தி காலத்தில் பெறப்படும் தகுதியான அனைத்து மனுக்கள் மீதும் எவ்விதத் தாமதமும் இன்றி, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உரியத் துரித சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏரல் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை சார்ந்த கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் ஏரல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


