தமிழகத்தில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர குழு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக உறுப்பினர் எம். கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் “தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்களது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் தற்போதையச் சூழலில், இது குடும்ப நலன் சார்ந்த மிக முக்கியமான நடவடிக்கையாகும்.
இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவை அனைவரும் வரவேற்கின்றனர். மது அரக்கனிடமிருந்து தமிழகத்தைக் காக்க, எதிர்காலத்திலும் இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.


