தமிழகத்தில் மதுப்பிரியர்களின் நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, மது விற்பனையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் “ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு மில்லி அளவுதான் மதுபானம் வழங்க வேண்டும் என்பதை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். மதுபானம் வாங்குபவர்களின் ஆதார் அடையாள அட்டை மற்றும் கைரேகையைப் பதிவு செய்த பின்னரே மது விநியோகம் செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காக (பாட்டிலுக்கு ₹10) நான்கு ஆண்டுகள் அறவழிப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதைப் போன்ற முறையை மது விற்பனையிலும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்


