தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி நிலைய வாகனங்களுக்கான கூட்டாய்வு வருகிற 12ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி வாகனங்களுக்கான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் 2012ன் படி வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து பள்ளி வாகனங்களையும் மாவட்ட அளவிலான சிறப்பு குழு பள்ளி வளாகத்தில் அல்லது பொது இடத்தில் ஆய்வு செய்து பொதுச்சாலையில் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வலுவலக எல்கைக்குட்பட்ட கல்வி நிலைய வாகனங்களை வருகிற 12.05.2026 செவ்வாய் கிழமை அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மேற்பார்வை அலுவலர், குழு உறுப்பினர்கள், சார் ஆட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் இயக்கூர்தி ஆய்வாளர்கள் முன்னிலையில் கூட்டாய்வு நடத்தப்பட உள்ளது எனவும், மேற்படி கூட்டாய்வில் அனைத்து பள்ளி வாகனங்களை தவறாது ஆஜர்படுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அனுமதிச்சீட்டின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என வட்டார போக்குவரத்து அதிகாரி / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


