திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது வாசகர் வட்டத்தின் தலைவர் முனைவர் சரவணகுமார் வரவேற்றார் மதிப்புறு முனைவர் தம்பான் தலைமை வகித்தார் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி முன்னிலை வகித்தார் நெல்லை மருத்துவக்கல்லூரி செவிலியர் மணிகண்டன் எழுதிய முதியோர் நலம் பற்றிய முதுமை ஒரு வரம் நூலை தமிழ் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு திறனாய்வு செய்தார் நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரிக்கு முழு உடல் தானம் செய்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற உலகநாதன் குருதி கொடை வழங்கிய சமுக ஆர்வலர் சுரேஷ் மற்றும் நோயுற்ற தந்தையை பராமரிக்கும் சகோதரர் கள் சுவாமிநாதன் சரவணன் ஆகியோருக்கு கேடயம் வழங்கி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நூலாசிரியர் ஏற்ப்புரை வழங்கினார் கவிஞர் ஜெயபாலன் மேனாள் துணைஆட்சியர் தியாகராஜன் கவிஞர்கள் சுப்பையா ஜெயபாலன் பிரபு விரைமைதீன் வாழ்த்துரை வழங்கினார்கள் வாசகர் வட்டத்தின் மாணிக்கவாசகம் பிச்சுமணி பொன்னையா ஐசக்பாலசிங் சேதுராமன் மாணவர்கள் அஜய்பிரவின் முத்து கண்ணன் அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டனர் மரியபால்ராஜ் மணிகண்டன் ஆகியோர் நூலக புரவலராக சேர்ந்தனர் கிளை நூலகர் அகிலன் முத்துகுமார் நன்றி கூறினார்


