பொருநை அருங்காட்சியகம் 150 வருட பயணம் – முத்தாலங்குறிச்சி காமராசு

110.00

Description

இது 150 ஆண்டுகால நீண்ட பயணம். ஆதிச்சநல்லூர் குறித்து 2010-இல் ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ என்ற நூலையும், 2020-இல் ‘ஆதிச்சநல்லூர் வழக்கு எண்: 13096/2017’ என்ற நூலையும் எழுதினேன். ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தபோதே ‘ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் அறிக்கையும்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளேன்.

கடந்த டிசம்பர் 20, 2025 அன்று தமிழக முதல்வர் அவர்கள் பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். அதன் நினைவாக நான் ‘நெல்லை மாவட்ட வரலாறு’ என்ற நூலை வெளியிட்டேன். அந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சுகுமார் அவர்கள், மறுநாளே நெல்லையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அதனைத் தமிழக முதல்வரிடம் வழங்கி மகிழ்ந்தார். அவருக்கு எனது நன்றியை எப்படித் தெரிவிப்பது என்றே தெரியவில்லை.

தற்போது பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களைப் பார்த்தபோது, அவற்றை உடனே ஆவணப்படுத்த வேண்டும் என எண்ணினேன். அதன் விளைவாகவே இந்நூல் உங்கள் கரங்களில் இன்று தவழ்கிறது.