குளங்கள் சூழ்ந்த கோபாலசமுத்திரம்

250.00

Description

கோபாலசமுத்திரத்தினைப் பூர்வீக குடியாகக் கொண்டவர் தான் டாக்டர் சுந்தரேசன். கோபால சமுத்திரத்தினை பற்றி ஆய்வு செய்துள்ளவர். கிராம உதயம் என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருபவர்.

கோபாலசமுத்திரத்தினைத் தலைமையிடமாகக் கொண்ட கிராம உதயம், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்தோப்பு வரை வளர்ந்து விரிந்து காணப்படுகிறது. கந்து வட்டியில் இருந்து மகளிர் குழு மூலமாகக் குடும்பத்தினைக் காப்பதுதான் இந்த நிறுவனத்தின் பணி. இரு மாவட்டங்களிலும் மரக்கன்று நடுவது, இலவச மருத்துவ முகாம், இலவச கண்சிகிச்சை முகாம் உள்பட பல்வேறு நலப்பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இந்தத் தொண்டு நிறுவனம் தான் தாமிரபரணி நதியில் பொதிகை மலையில் தொடங்கி புன்னக்காயல் வரை மரக்கன்று நட்டு வருகின்றனர். 30 சதவீதம் இடத்தில் பணியை முடித்து விட்டனர்.