தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் பொன்மாரி தலைமையிலான பறக்கும் படையினரும், காவல்துறையினரும் இணைந்து இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நடராஜன் என்பவரை நிறுத்திச் சோதனையிட்டனர்.
அவரது வாகனத்தில் ரூ.1,54,300 இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அந்தத் தொகையை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்து தூத்துக்குடி தாலுகா தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இந்தப் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்


