தூத்தக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம்,பட்டினமருதூரில் அறிவிக்கப்பட்ட தொல்லியல் தளத்தில் இன்று 17.03.2026 காலை 10மணி முதல் முதல்கட்ட அகழாய்வு பணிகள் அரம்பம் ஆகி நடைபெற்று வருகின்றது என்று தூத்துக்குடியினை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி தகவல்.
நமது தமிழக அரசால் 2025-26ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தொல்லியல்தளமாக அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நமது பட்டினமருதூர் தளத்தில் நமது இந்திய தொல்லியல் துறையின் முறையான அனுமதிக்கு பின் இன்று உடனடியாக அகழாய்வு பணிகள் இந்த தளத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள திரு.அஜய்குமார் தலைமையிலான குழுவினர் மூலம் ஆரம்பம் ஆகி நடைபெற்று வருகின்றது என்றும்,
முதல்கட்டமாக சர்வே எண் 40/1 பகுதியில் அறிவியியல் ரீதியாக குறிக்கப்பட்ட புள்ளிகளில் அளவீடு செய்யப்பட்டு சுமார் 20மீ X 20மீ என்ற அளவீட்டில் அகழாய்வு குழி குறிப்பிடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது என்பது நமது தமிழக தொல்லியல் வரலாற்றில் மற்றும் ஓர் மைல் கல் எனலாம் என்றும், நாம் இதுவரை மேற்பரப்பில் கண்டெடுத்து ஆவணப்படுத்தியுள்ள அடிப்படை ஆதாரங்களை, விரைவில் காலவரையரை(Time Line data) புள்ளிகளுடன் அகழாய்வில் கண்டெடுக்கப்படும் தொன்மங்களின் சான்றுகள் வலுசேர்த்து அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்திடுவது திண்ணம் என்றார்.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வினை சாத்தியம் ஆக்கிட ஒத்துழைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும், தொல்லியல் துறையினருக்கும், பல்கலைகழகங்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும், நிலத்தின் உரிமையாளர்களுக்கும் நமது தமிழ் சமூகத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகள் என்றார்.


