கருங்குளம் சம்பன் குளம் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.
கருங்குளம் பழமையான ஊராகும். இந்த ஊரில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் வெங்கிடாசலபதி கோயிலும், தம்பதி சகிதமாக இருக்கும் மார்த்தாண்டேஸ்வர் ஆலயமும் உள்ளது. இந்த ஆலயங்களுக்கு நித்திய தேவைகளை பூர்த்தி செய்ய மலையடிவாரத்தில் சம்பன் குளம் என்றவொரு குளம் உள்ளது. இந்த குளம் தூர்ந்து போய் விட்டது. இதனால் அமலை செடிகள் அடர்ந்து உபயோகபடுத்த முடியாத அளவுக்கு மாறி விட்டது. மேலும் சிறு மழை பெய்தால் கூட குளத்தில் தண்ணீர் பெருகி கருங்குளம் மூலைக்கரைப்பட்டி சாலையில் வெள்ளம் பெருகி போக்குவரத்து தடை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் இங்கு வரும் பக்தர்களும், ஊர் மக்களும் இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்களிடம் கொண்டு சென்றனர். அவர் இந்த குளத்தினை தூர் வார நடவடிக்கை எடுத்தார்.
இதற்படி மாவட்ட நிர்வாக நிதி உதவியுடன் எக்ஸ்னரோ தனியார் நிறுவன வாடகை இல்லா இயந்திரம் மூலம் இந்த பணி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ராட்சத இயந்திரம் மூலம் இந்த பணி துவங்கியது. இதன் மூலம் அமலை செடி அகற்றப்பட்டு, கரைகள் மேம்படுத்தப்பட்டது.
இந்த பணியை மாவட்டஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார். அப்போது இந்த குளத்தில் கரைகளில் கல்பதித்து மக்கள் நடந்து செல்ல வாக்கிங் தடம் அமைத்து அழகு படுத்த வேண்டும் என மாதிரி தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை விடுத்தார். அவர் உடனே கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் ஆறுமுகநயினாரைகூப்பிட்டுஅதற்கானநடவடிக்கை எடுக்ககூறினார். தாத்தான்குளம் மற்றும் சுற்று பகுதியில் குடிதண்ணீர் வரவில்லையென்று தாதன்குளத்தினை சேர்ந்த சுந்தர் கோரிக்கை வைத்தார். அதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். விரைவில் குடிதண்ணீர் வழங்கப்படும் என கூறினார். அதன்பின் கருங்குளம்,கொங்கராயகுறிச்சி வாக்குசாவடிகளை ஆய்வு செய்ய அவர் கிளம்பினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹர் அகமது , நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவராஜன், முத்தாலங்குறிச்சி காமராசு ,கருங்குளம் சமூக ஆர்வலர் செந்தில்குமார், மருதூர் மேலக்கால் உதவி பொறியாளர் சதீஷ், கருங்குளம் பஞ்சாயத்து கிளர்க் சங்கரபாண்டியன், கவிஞர் மணிமொழிசெல்வன், கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், தன்னார்வ தொண்டர் செல்வன்துரை, ஒப்பந்ததாரர் கே.பி.மணி, கிட்டாட்சி ஆப்பரேட்டர் பொன்னன்குறிச்சி துரை, ஊர்பிரமுகர்கள் சுடலைமுத்து, உட்பட பலர் கலந்துகொண்டனர்.


