தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 3-ஆம் தேதி(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 10-ஆம் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,
17-ஆம் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 24-ஆம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்


