வருகிற 27ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக கூட்டுறவு வீட்டுவசதி சங்க பணியாளர்கள் யூனியன் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
வாரத்தில் 5 நாள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜன.27-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வங்கி ஊழியா்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் திருநெல்வேலி மண்டல கூட்டுறவு வீட்டுவசதி சங்க பணியாளர்கள் யூனியன், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதித்துறை சார்ந்த அலுவலகங்கள், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், மற்றும் வீட்டுவசதி சங்கங்களுக்கும் 5 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும், தேவையான பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் நகைக்கடன் வழங்க நிர்பந்திக்கும் துறை அலுவலர்களின் எதேச்சதிகாரப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது


