தூத்துக்குடியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மீனவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை….
தூத்துக்குடி தாமஸ் நகரைச் சேர்ந்தவர் அந்தோணி சந்திரன் மகன் மைக்கேல்ராஜ் (47), மீனவர். இவர் நேற்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் சக மீனவர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார். பின்னர் இரவு கரைக்கு திரும்பி வரும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
இந்த நிலையில் மீனவர் இறந்த சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தூத்துக்குடி மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


