தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள செயல்முறை விளக்க மையத்தினை ஆட்சியர் க.இளம்பகவத் இன்று திறந்து வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் -2026 தொடர்பாக பொதுமக்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை முறை இயந்திரங்களின் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல்முறை விளக்க மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று திறந்து வைத்து இயந்திரங்களின் செயல்முறையினை பார்வையிட்டார்


