தூத்துக்குடியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய இளைஞர் தினத்தை போதைமருந்து இல்லா இந்தியாவை நோக்கி வழிநடத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் செயலாளர் / மூத்த சிவில் நீதிபதி ஏ.வி. சுபாஷிணி சிறப்புரை ஆற்றினார். முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் தலைவர் ஆர். வசந்தி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் குழு வழக்கறிஞர் ஆர். சங்கரநாராயணன், வி.வி.டி. நினைவு மேல்நிலைப் பள்ளி செயலாளர் டி. பிரேமாநந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். கனக ரத்தினமணி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை பள்ளியின் தமிழாசிரியர் எம். ரேவதி தொகுத்து வழங்குகினார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் ஜீசஸ் ஆல்பன் நன்றியுரை ஆற்றினார்.


