தூத்துக்குடி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலையில் கோவிலில் கோபூைஜை, விசுவரூப தரிசனம் நடந்தது. அர்ச்சகர் வைகுண்டராமன் தலைமையில் சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன.
விழாவில், வைகுண்ட ஏகாதசி மற்றும் கட்டளைதாரர் சுப்பிரமணிய சுவாமி மகமை கட்டளை செயலாளர் எம்எஸ்எஸ் கந்தப்பன் உட்பட திரளான திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு இன்று இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


