தூத்துக்குடியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி பூங்காக்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தெரிவிக்கையில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்பது நம்முடைய வாழ்க்கையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஓரு முக்கிய திருநாளாக கொண்டப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு அன்றைய தினம் மாநகர மக்கள் ஒன்றாக கூடி கொண்டுவதற்காக மாநகராட்சி பகுதியிலுள்ள ராஜாஜி பூங்கா, டூவிபுரம் பூங்கா, எம்ஜிஆர் பூங்கா, முத்து நகர் கடற்கரை, ரோச் பூங்கா, தனசேகரன் நகர் பூங்கா என மாநகரில் உள்ள அனைத்து பூங்காக்களை மேம்படுத்தும் விதமாக பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


