தென்திருப்பேரையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நடந்து வருகிறது. கடந்த 17 ந்தேதி முதல் பேரணி, பயிலரங்கம் என பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார் திருநகரி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் நடந்தது.
ஒன்றிய ஆணையாளர் ராஜா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்டோ முன்னிலை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திர பிரபு, திருக்குறள் அன்பழகன், மணிமொழிச்செல்வன், எழுத்தாளர் மாரிமுத்து, காளிமுத்து ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள். தமிழ்வளர்ச்சித்துறை உதவியாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் பெ. இளங்கோ தலைமையில் தமிழ் வளர்ச்சித்துறை செய்திருந்தது.


