தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு பனிமய மாதா பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமை வகித்தார். விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து காெண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில்: நாம் செய்கின்ற ஓவ்வொரு நல்ல உதவிகளும் அன்பும் தான் எல்லோரையும் அரவணைத்து நல்லவழிகளுக்கு நம்மை அழைத்து செல்லும்.
இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் உழைக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். ஒவ்வொரு திட்டங்களையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருவதன் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் டென்சிங், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பகுதி தகவல் தொழிற்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், மற்றும் கமலி, நிர்மலா உள்பட பாதிரியார்கள், திருச்சபை ஊழியர்கள், இளைஞரணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


