கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் தாலுகா, கொங்கராயகுறிச்சி ஶ்ரீ பொன்னுறுதி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு இன்று நடைபெற்றது. பைரவரின் அவதார தினமான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மஹாதேவ அஷ்டமி எனப்படும். 64 பைரவர்களின் அம்சமாக விளங்கும் ஶ்ரீ சட்டைநாத சுவாமி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஶ்ரீ திருநிலைநாயகி அம்பாள் சமேத ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் மற்றும் கொங்கராயகுறிச்சிஶ்ரீ பொன்னுறுதி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோவில் ஆகிய இடங்களில் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகின்றார்.
மஹாதேவ அஷ்டமி அன்று காலை 08:30 மணியளவில் மங்கல இசையுடன் வழிபாடு துவங்கியது. காலை 09:00 மணியளவில் சங்கலபம், விநாயகர் வழிபாடு, கலசபூஜை மற்றும் வேதபாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் மற்றும் சட்டைநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் கலச அபிஷேகமும் நடைபெற்றது. பகல் 12:00 மணியளவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், சட்டைநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஸமாராதனை நடைபெற்றது. நிறைவாக அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கொங்கராயகுறிச்சி ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் சமேத ஶ்ரீ பொன்னுறுதி அம்பாள் தேவஸ்தான பூஜா கைங்கர்ய ஸ்தானீகர் குணசேகர பட்டர், அறங்காவலர் ஆறுமுகநேரி சோ.தியாகராஜன் மற்றும் சட்டநாத சுவாமி பக்தர்கள் செய்திருந்தனர்.


