தூத்துக்குடியில் அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பி.டி. ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் மாசாணமுத்து (38). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில், பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் (20) என்பவர் திடீரென மாசானமுத்துவை காலால் மிதித்து விட்டு சென்றாராம்.
இதை கண்டித்த அவரிடம் அரிவாளை காட்டி சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இவர் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


