தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் பாரதியார் 149 ஆவது பிறந்தநாள் விழா சிவன் கோவில் நேரடி அருகே நடந்தது.
விழாவில், பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மாவட்டத் தலைவர் மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில், ஆன்மீக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் உஷா தேவி, மண்டல தலைவர்கள் மாதவன், லிங்கச்செல்வன், ஓபிசி அணி மாவட்ட தலைவர் குருமூர்த்தி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் பாலாஜி, மற்றும் நிர்வாகிகள் ராஜேஷ் கனி, லதா, ஜெயபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


