கோவில்பட்டி அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறில் மதுக்கூடத்தில் வேலை செய்து வரும் 36 வயது நபர், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதுடன், மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு மறுநாள் தகவல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக குழந்தைகள் உதவி மையத்தின் உறுப்பினர்கள் சிறுமி, தாயை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததும், யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.


