தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் மாரி செல்வம் (24), லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 6ம் தேதி தனது பைக்கில் முத்தையாபுரம் சென்றுவிட்டு தூத்துக்குடிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். உப்பாத்து ஓடை பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முக குமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.


