செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் எம்ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய கழக செயலாளர் செங்கான் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் உதய சங்கர், விவசாய அணி மாரியப்பன், இளைஞர் பாசறை கதிரேசன், சுப்பையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒன்றிய இணைசெயலாளர் பேச்சியம்மாள், மாரியப்பன், செந்தாமரை, சோம சுந்தரம், முருகன், மாலையப்பன், ஆனந்த கணபதி, இலங்காமணி, சோமசுந்தரம், செல்லையா, சுப்பிரமணியன், அந்தோணி குமார், கிருஷ்ணன், பரமேஸ்வரன், வல்லநாடு விஜய உடையார், சுடலைமுத்து, சுப்பிரமணியன், சேகர், சந்தனம், சுரேஷ்காந்தி, கள்ளவாண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


