நாசரேத் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரியை வாலிபர் கம்பால் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பேய்குளம் அருகே சின்ன மாடன் குடியிருப்பை சேர்ந்தவர் தங்கவேல் மகன் நாகராஜன் (53) இவர் தனது வீட்டிலேயே கடலை மிட்டாய் தயார் செய்து சுற்று வட்டார கடைகளுக்கு சப்ளை செய்யும் குடிசைத் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சித்திரை வேல் மகன் ஜெய்சங்கர் (26) என்பவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது,
இதில் ஜெய்சங்கர் கம்பால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நாகராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது அப்பாகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


