கோவில்பட்டியில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே கிழக்கு பாண்டவர் மங்கலம் நடுதெருவை சேர்ந்த சிவசங்கர் மகன் சேது மாதவன் (45). கூலி தொழிலாளி. இவர், சம்பவத்தன்று இளையரசனேந்தல் ரோடு மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
இந்தநிலையில், எதிர்பாரதவிதமாக கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சகிச்சைக அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். இதை தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் காமராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


