தூத்துக்குடியில் தொடர் கனமழை காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கட்நத 2 நாட்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (நவ.29) கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பதிவு செய்வதற்கான முகாம் மழையின் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.


