காலிப்பாட்டில் சேகரிக்கும் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு வேலைப்பளுவை அதிகரிக்கும் விதமாக காலிப்பாட்டில் சேகரிக்கும் வேலையை கூடுதலாக அறிவித்திருக்கும் தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் உத்தரவை கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மடத்தூரில் உள்ள அரசு மதுபான குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் நெல்லை மண்டல தலைவர் நொப்போலியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் மாசானமுத்து, புங்கா லிங்கம், மரகதலிங்கம் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


