ஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையைச் சேர்ந்தவர் சுபின் (27) இவர் தனது ஊரிலிருந்து திருச்செந்தூருக்கு மாேட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் மேற்கிலிருந்து கிழக்காக சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


