பீகாரில் நிதிஷ்குமார் 10வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். பீகாரில் 10வது முறையாக முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் டி.எம்.குழந்தைபாண்டி தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.மேகாஸ், மாவட்ட செயலாளர் மாரியப்பன், விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ஆதிலிங்கம், வடக்கு மண்டல தலைவர் அற்புதமணி, துணைத்தலைவர் ராசுக்குட்டி, கயத்தாறு ஒன்றிய பொருளாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


