ஆத்தூர் பகுதியில் கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17.09.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த வழக்கில் திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த சங்கரநைனார் மகன் மணிகண்டன் (37) என்பவரை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று ஆத்தூர் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


