தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 18002030401 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 18002030401 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சிமேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.


