கயத்தாறு அருகே வீடுபுகுந்து 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் பட்டு ராஜா (30). இவர் சில நாள்களுக்கு முன்பு கயத்தாறு அருகேயுள்ள கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
அப்பகுதியினர் திரண்டு வந்து பிடிக்க முயன்றபோது, அவர் தனது பைக்கை விட்டுவிட்டு ஓடிவிட்டாராம். பைக் எண் மூலம் அவரை போலீசார் கண்டறிந்தனர். சம்பவம் குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்தும் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, பட்டுராஜாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.


