தூத்துக்குடியில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் ஆயுஷ் ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளிலிருந்து இரண்டு வாரங்கள் அதாவது செப்.17 முதல் 28ஆம் தேதி வரை சேவை நாட்களாக கணக்கில் கொண்டு நாடு முழுவதும் பாஜக சார்பாக பொதுமக்களுக்கு சேவைகள் செய்திட தேசிய தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி கண் சிகிச்சை முகாம், மருத்துவ முகாம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வடக்கு ரதவீதியில் உள்ள டிஏ திருமண மண்டபத்தில் வைத்து ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது.
விழாவில் 200 பேருக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. மாவட்ட துணை தலைவர் சிவராமன், முன்னாள் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்மிகப் பிரிவு மாநில துணைத் தலைவர் நெல்லையம்மாள், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மண்டல பொதுச் செயலாளர் லட்சுமி வேல்கனி, கொரைரா, பாலமுருகன், இளைஞர் அணி சக்திவேல் மகளிர் அணி வெள்ளத்தாய், உஷா தேவி, ஆன்மிக பிரிவு ஓம் பிரபு மருந்துவ பிரிவு பாலாஜி, மகளிர் அணி செல்வி சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்


