தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் ஜே.எல்.பி. ரோச் விக்டோரியா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் குமரசாமி ராஜா முதலமைச்சராக இருந்தபோது உணவுத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய ஜேஎல்பி ரோச் விக்டோரியாவின் 131வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பனிமய மாதா ஆலயம் எதிரே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு குரூஸ்பர்னாந்து மக்கள் மன்றம் சார்பாக தலைவர் இக்னேஷியஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் ரூஸ்வெல்ட் முன்னிலையில் துணைத் தலைவர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் வெலிங்டன், ரெக்னோ, பெர்னி, பிரான்சிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


