தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக ’உலக சுற்றுலா தினம் – 2025” மற்றும் ‘தூய்மை விழிப்புணர்வு முகாம்” கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியையொட்டி தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா இயக்குநர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கோட்டையில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரி மற்றும் வாகைக்குளம் ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ/மாணவியர்களிடையே ‘சுற்றுலா மற்றும் நிலையான உருமாற்றம்” என்ற தலைப்பின் கீழ் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கோட்டை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா.சீதாராமன் மற்றும் கோவில்பட்டி சில்வர் ஸ்டோன் பார்க் ரிசார்ட்ஸ் உரிமையாளர் குணாளன் ஆகியோர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா.சீதாராமன் சிறப்புரை ஆற்றினார். கோவில்பட்டி சில்வர் ஸ்டோன் பார்க் ரிசார்ட்ஸ் உரிமையாளர் குணாளன் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற செயலாளர் சுப்பிரமணியன், கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை மாணவ, மாணவியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கோட்டையில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடத்தப்பட்டது. இம்முகாமில், தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரி கல்லூரி மற்றும் வாகைக்குளம் ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ/மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கோட்டை வளாகத்தில் தூய்மைப் பணியினை மேற்கொண்டு, மரக்கன்றுகள் நட்டனர்.
இதில், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் இரா.சீதாராமன், கோவில்பட்டி சில்வர் ஸ்டோன் பார்க் ரிசார்ட்ஸ் உரிமையாளர் குணாளன், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரி மற்றும் வாகைக்குளம் ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். மேலும், வருகைபுரிந்த சுற்றுலாப் பயணிகளின் NNO Plastics -ஐ ஊக்குவிக்கும் விதமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.


