தூத்துக்குடி மின்பிடி துறைமுகத்தில் வாலிபரை அரிவாளால் தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி, வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கெங்கா துரைமுத்து (29), நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் லட்சுமணன். தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில், லட்சுமணனுக்கும் அவருடன் வேலை பார்த்து வரும் மேற்கு காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் மகன் காமராஜ் (31), வேப்பலோடை வடக்கு தெருவை சேர்ந்த தங்கபாண்டி மகன் பொன் ஆஸ்லே (26) ஆகிய 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இருவரும் மீன்பிடி துறைமுகத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அங்கு வந்த காமராஜ், பொன் ஆஸ்லே ஆகிய இருவரும் லட்சுமணனிடம் தகராறு செய்தார்களாம்.
இதனை கெங்கா துரைமுத்து தட்டி கேட்டராம். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து கெங்கா துரைமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம். இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தட்டி வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் திருமுருகன் விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.


