அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கூடுகை நடந்தது.
அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2007 &08 ஆம் ஆண்டு 9 மற்றும் 10 ம் வகுப்பு படித்த மாணவர்கள் கூடுகை நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சங்கரி தேன்மொழி தலைமை வகித்தார். சென்னை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில துணைதலைவர் நல்லாசிரியர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பட்டுராஜன் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, இராமநாதபுரம் மாவட்டம் சார்பு நீதிபதி, சட்டபணி ஆலோசனை குழு செயலாளர் இராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நெல்லை அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் கவிபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.


