ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் கிராம உதயம் சார்பில் இலவச தையல் பயிற்சி பள்ளி துவக்க விழா நடந்தது. ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ரத்ன சங்கர் தலைமையேற்று பள்ளியை துவக்கி வைத்தார். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை அலுவலக மேலாளர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். பகுதி பொறுப்பாளர் ஆனந்த செல்வன் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். புளியங்குளம் ஊர் தலைவர் முருகேசன், கிராம உதயம் சார்பில் பகுதி பொறுப்பாளர்கள் கண்ணன், முருக«செல்வி, ஆறுமுக வடிவு மைய பொறுப்பாளர்கள் வள்ளியம்மாள், அனிதா, விஜயா, கல்யாணி, கோகிலா, அய்யம்மாள், இந்துமதி, கோமதி, ராமலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பகுதி பொறுப்பாளர் பிரேமா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை மேலாளர் வேல் முருகன் தலைமையில் பகுதி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


