தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன (கவுன்சிலர்) உறுப்பினர் பதவிக்கு கெ.ஜஸ்டின் என்பவர் விருப்பமனு அளித்தார்
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவிக்கு உதயநிதி பிரஸ் ஜூஸ் கார்னர் கடை உரிமையாளர் கெ.ஜஸ்டின் விருப்பம் மனுவை மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ரூகேந்தர் லால்-யிடம் வழங்கினார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது மாற்றுத்திறனாளி மக்களின் பாதுகாவலனாக விளங்கும் தமிழக முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கு இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் நியமன கவுன்சிலர்கள் நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது மாற்றுத்திறனாளிகள் அனைவருடைய வாழ்வில் ஒளி ஏற்றிய ஒரு நிகழ்வாகும்.
தமிழ்நாடு துணை முதல்வர் அவர்கள் எனக்கு செய்த பெரிய உதவி மூலம் தூத்துக்குடியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கும் / அனேக ஏழை எளிய மக்களுக்கும் உதவி செய்வது வழக்கம் தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள மாமன்ற உறுப்பினர் நியமன பதவிக்கு விருப்பமனு மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் அளித்துள்ளேன்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அன்பைப் பெற்ற எனக்கு பணியாற்ற வாய்ப்பளித்தால் மாற்றுத் திறனாளிகளுக்கும் பொது மக்களுக்கும் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது தமீம் அன்சாரி, ஆபிரகாம், ஸ்டீபன், கற்பகவல்லி, செல்வகுமார், தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் உட்பட பலர் உடனிருந்தனர்.


