எங்களது முத்தாலங்குறிச்சி டாட் காம் வெப்சைட்டில் 135 வது நாடாக தெற்கு ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பொசுனியாவும், எர்சேகோவினாவும் சேர்ந்துள்ளது என மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நாட்டில் வசிக்-கும் தமிழ் நெஞ்சம் ஒன்று நமது வெப்சைட்டில் பங்கேற்று உள்ளது. அவருக்கு மிக்க நன்றி. எனது நூல்களையும், எனது வெப்சைட் பற்றி நான் எழுதும் கட்டுரை ஸ்ரீவைகுண்டம் டூடே நியூஸையும் கண்டு ஆதரவு கொடுக்கும் அனைத்து வாககர்களுக்கும் மிக்க நன்றி-. இது வரை ஐந்து லட்சத்து 19 ஆயிரம் வாசகர்கள் நமது வெப்சைட்டை கண்டு ரசிக்கிறார்கள் என்பது எங்களை உற்சாகம் படுத்துகிறது.
எங்களோடுதற்போது இணைந்த நாட்டை பற்றி சிறு குறிப்பு ஒன்றை காணலாம். பொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கி.மீ. அளவேயான அட்டிரியேடிக் கடல் எல்லையை நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.
இந்த நாட்டின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் சரஜீவோ, ஆட்சி மொழிகள்பொசுனிய, குரோசிய, செர்பிய ஆகியவையாகும்.
இது ஒரு குடியரசு நாடாகும்.
அருமையான வாய்ப்பை தொடர்ந்து பெருகிறோம். வாழ்த்துங்கள் வளருகிறோம். – முத்தாலங்குறிச்சி காமராசு


