முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய குளத்தூர் ஜமீன் கதை [kindle book]என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தூர் என்னும் ஊர் உள்ளது. இந்த குளத்தூரில் தற்போது ஜமீன்தார் இல்லை. அவர்கள் தங்களது அரண்மனைய விற்று விட்டு சென்று விட்டார்கள்.
குளத்தூர் ஜமீன்தார் பிள்ளை சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இரண்டு மிகப்பெரிய அரண்மனையைக் குளத்தூரில் கட்டி வைத்து இருக்கிறார்கள். இந்த அரண்மனையை ஜமீன்தார் பிற்காலத்தில் நாடார் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்களுக்கு விற்று விட்டு சென்று விட்டனர். ஒரு அரண்மனை ராமசாமி நாடார் வகையாறா கையிலும், மற்றொன்று நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பள்ளி நடத்தவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
குளத்தூர் என்று பெயர் வருவதற்கு காரணமே குளம் தான். இந்தக் குளத்தினை ஜமீன்தார் தான் வெட்டியிருக்கிறார்.
அரண்மனை ராணிகள் குளிப்பதற்காக இந்தக் குளத்தினை வெட்டியிருக்கிறார்கள். தற்போது இந்தக் குளத்தினைப் பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தக் குளத்தில் நாலு புறமும் படித்துறைகள் கட்டிவிடப்பட்டுள்ளன. மேலும் சுவாமி சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏரி போல குளங்களை வெட்டியுள்ளார்கள். ஜமீன்கள் வெட்டிய பல பெரியகுளங்களும் இந்த ஊரில் உள்ளன. குளங்கள் நிறைந்துள்ள ஊர் ஆதலால், குளத்தூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தற்போது குளத்தூரில் ஜமீன் இருந்ததா? என்று கேட்டாலோ அல்லது ஜமீன் வாரிசுகள் உள்ளார்களா? என்று கேட்டாலோ யாருக்கும் தெரியவில்லை. இங்குள்ள ஜமீன்தார்கள் தற்போது இடம் பெயர்ந்து திருநெல்வேலிக்கு சென்று விட்டார்கள். திருநெல்வேலி டவுணில் இவர்களது பங்களா உள்ளது. இந்தப் பங்களா மிகப் பெரியதாக காணப்படுகிறது.https://www.amazon.in/-Kulathoor-Jamin-ebook/dp


