தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 7ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று துப்பாகி குண்டுகளின் வடு இன்னும் நம் மனதிலிருந்து மறையவில்லை, மறக்கவும் செய்யாது என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்களைத் தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக சுட்டு வீழ்த்திய கருப்பு தினம். தங்களது உரிமைகளுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த 13 போராளிகளை இந்த நாளில் நினைவு கூர்வோம். அவர்கள் மீது துளைத்த துப்பாக்கி குண்டுகளின் வடு இன்னும் நம் மனதிலிருந்து மறையவில்லை, மறக்கவும் செய்யாது. என்று தெரிவித்துள்ளார்.


