தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வுபெற்ற கப்பல் மாலுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி எஸ்பிஜி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மரியதாசன் மகன் ஸ்டீபன் (70) இவர் கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று இரவு 9 மணி அளவில் தூத்துக்குடி விஇ ரோடு அந்தோனியார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த பைக் அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


