திருச்செந்தூரில் குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெகதீஷ் (32) என்பவருக்கும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் ஜவகர் (32) என்பவருக்கும் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (மே 21) இரவு ஜெகதீஷ் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஜவகர் வீட்டிற்கு சென்று அவரது வீட்டு வாசலில் வைத்து ஜவஹரிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஜவஹருக்கும் ஜெகதீசுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இதில் ஆத்திரம் அடைந்த ஜவகர், ஜெகதீசனை வெட்டியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெகதீசன் உயிரிழந்தார். மேற்படி கொலை வழக்கு குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் உடனடியாக ஜவகரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக நடந்த இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


