கோவில்பட்டியில் பனியன் கடையில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பேருந்து நிலையத் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் வேல்முருகன் என்பவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பனியன் நிறுவனம் நடத்திவருகிறார். இவரது நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், பனியனை மொத்தமாக வாங்குவதுபோல் பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, வேல்முருகன் திடீரென வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது, மேஜை மீது வைக்கப்பட்டிருந்த செல்போனை அவர் திருடிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, கழுகுமலை அருகே க.இராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் விக்னேஷ் (19) என்பவரைக் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.


