கோவில்பட்டியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல் பாண்டியன் தலைமையில் போலீசார் சாஸ்திரி நகர் மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் போஸ் நகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (32) என்பதும், அரிவாளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


